சதொச ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சதொச ஊழியர்கள் 153 பேரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் புத்திக ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோதே மேற்கண்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது.
2010 – 2014 காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை தேர்தல் பிரசாரம் மற்றும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்குகளை தாக்கல் செய்த ஆணையம், அமைச்சர் பெர்னாண்டோவின் நடவடிக்கையால் 40 மில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews