குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
கொழும்பில் ஊடகவியலளார்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த சர்ச்சையின் உதவியில் இந்தஅரசு ஆட்சியமைத்தது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் சரியாக விசாரிக்கப்படவில்லை. இதன் பாதிப்பின் விளைவினால் தற்பொழுது சிறு கைக்குண்டு மீட்கப்பட்டாலும் மக்கள் அச்சமடையும் நிலை உருவாகியுள்ளது.
இந்தப் பின்னணியை அரசாங்கமே உருவாக்கியது. அரசினால் மக்களுக்கு பாதுகாப்பினை வழங்க முடியாது என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியிலுள்ளது.
கார்தினாலின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு சிலரே பதிலளிக்கின்றனர். மாறுபட்ட பதில்களையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.
கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு.
#srilankanews
Leave a comment