சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதாக வந்த வினாக்களை தொடர்ந்து அதனை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பபட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது , சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் விற்பனை செய்வதற்கு இதுவரை எவ்வித நடாடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இதனை கொள்வனவு செய்யவும் யாரும் முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இது தொடர்பில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews