தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் அடுத்தவாரம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவை வழங்குதல் உட்பட மேலும் சில விடயங்களை கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் அடுத்தவாரம் கூடவுள்ளது. எனவே, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன், புதிய அரசமைப்பு, வரவு – செலவுத் திட்டம் ஆகியவை தொடர்பிலும் சந்திப்பில் அவதானம் செலுத்தப்படலாம் என தெரிய வருகின்றது.
Leave a comment