விவசாயத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை அமைச்சர் சமல் ராஜபக்ச ஏற்கமறுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது , விவசாயத்துறை அமைச்சை தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவுக்கு வழங்க ஜனாதிபதி உத்தேசித்திருந்தார்.
“ உழவு இலங்கை பயிர் செய்கை போர்” திட்டத்தை அவரின் தலைமையில் செயற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் விவசாயத்துறை அமைச்சை ஏற்க சமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சராக செயற்படும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment