russian
செய்திகள்உலகம்

வியூகம் மாற்றி தாக்கும் முனைப்பில் ரஸ்யா!!

Share

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியப் படைகள் குண்டுகள் வீசி தாக்குதலை தொடங்கியது.

அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று துருக்கியில் ரஷியா- உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

இதற்கிடையே சுமி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷியா, மனிதாபிபமான பாதையை திறந்துவிட்டது.

நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இன்று யாரும் எதிர்பாராத வகையில் மேற்கு பகுதியில் உள்ள இவானே-பிரான்கிவ்ஸ்க், லட்ஸ்க் ஆகிய நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நகரங்களில் உள்ள விமான நிலையம் அருகே தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷிய படைகள் கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைனின் கிழக்குப் பகுதிகளைத்தான் தாக்கி வந்தன.

தற்போது மேற்கு எல்லையில் மிக தொலைவில் உள்ள நகரங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியன் மூலம் ரஷியா போருக்கான புதிய திசையை குறிக்கலாம் என கருதப்படுகிறது.

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...