ரூபா 300 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் கடத்தற்காரரான ‘ரன் மல்லி’ கைது!

arrest

டுபாய் இராச்சியத்தில் “நந்துன் சிந்தகா அல்லது குற்றக் கும்பல் உறுப்பினரான ‘ஹரக் கட்டாவின்’ முக்கிய சீடன் ‘ரன் மல்லி’ பெருந்தொகையான போதைப்பொருளுடன் தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து ரூ. 300 கோடி பெறுமதியான 300 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

ஹெரோயினுடன் இலங்கையர்கள் குழுவொன்றும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள்  தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அரச புலனாய்வுப் பிரிவினர், போதைப்பொருள்  தடுப்புப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று மாலை 4 மணியளவில் குறித்த இழுவைப்படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version