இந்தியா வங்கதேசத்தில், துர்க்கா பூஜையின்போது நடாத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி என்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினரை வேருடன் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் துர்க்கா பூஜையின்போது இந்து ஆலயங்கள் மற்றும் பக்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த தாக்குதலில் 5 இற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment