54 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கத்திமுனையில் கொள்ளை! – இளைஞன் மடக்கிப்பிடிப்பு

Share

கத்திமுனையில் கொள்ளையிட வந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜூரித்த சம்பவம் யாழ்ப்பாணம் – நல்லூர் – கைலாசபிள்ளையார் கோவிலடியில் அமைந்துள்ள சொக்கன் கடையில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சொக்கன் கடைக்குள் புகுந்த குறித்த இளைஞன் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து பணம் கேட்டுள்ளார்.

இதன்போது, அங்கு நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், அங்கு வந்த பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞன் இன்று – காலை, அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள புத்தக கடைக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த பெண் கூக்குரல் எழுப்பியநிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அதன் பின்பே நல்லூர் – சொக்கன் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...