அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்குத் தீர்வுகாணும் வகையில், இந்தியாவிலிருந்து மாத்திரமின்றி பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியைக் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு இறக்குமதியாகும் அரிசி சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதோடு, நுகர்வோருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment