கொலைகார கேஸ் சிலிண்டர்களைத் திரும்ப பெறுக: வெடித்தது போராட்டம் (படங்கள்)

நாட்டில் தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பிற்கு எதிராகவும் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் இன்று (04) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Gas Protest 01

ஆர்ப்பாட்டத்தின் போது, “கொலைகார எரிவாயு சிலிண்டர்களை திரும்ப பெறு, இழப்பீடு கொடு, ம்ற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறை, என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை நிறுவனங்களின் நலனுக்காக இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களின் உயிர்களை அரசாங்கம் பலிகொடுத்துள்ளதாகவும், சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான எரிவாயுவை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version