யாழ். மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ஸ்ரீ சற்குணராஜா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இளங்கோவன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மதத்தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இதன்போது மணிவிழா மலராக கடமை தவறா கதிரவன் வேதா என்னும் மணிவிழா நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ஓய்வுநிலை அரசாங்க அதிபர் வேதநாயகன் அவர்களுக்கான கௌரவங்களும் வழங்கப்பட்டன.





Leave a comment