கொவிட் தொற்றுநோய் காரணமாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திய பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இன்று புதுடெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸின் முதல் விமானம் (UK-138) (A320-NEO) புது டெல்லியில் இருந்து புறப்பட்டு 138 பயணிகளுடன் இன்று காலை 10.10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையத்தை வந்தடைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் நீர் பீரங்கி மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.
பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்கு சிலோன் தேயிலை பரிசு பொதிகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும்‚ விஸ்தாரா ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 3 விமான சேவைகளை நடத்தவுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் கொழும்பில் இருந்து மும்பை மற்றும் புதுடெல்லி இடையே தனது தினந்தோறும் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews