இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

prasanna gunasena 696x392444 1

இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன

நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது

இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை தரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் இளைஞர்கள் அக்கறை செலுத்தாதுள்ளனர். இதனால் அவர்கள் பாதிப்பை எதிர்கொள்ளாத நிலை காணப்பட்டாலும் , அவர்களால் சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்கும்.

சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதன் மூலமாக புதிய திரிபுடன் வைரஸ்கள் உண்டாகலாம். அவற்றை தடுப்பூசிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படலாம்.

அவற்றை கருத்து கொண்டே வைரஸ் திரிபுகளின் உருவாக்கத்தைக் குறைக்க உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை செலுத்துமாறு பரிந்துரைத்துள்ளது – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Exit mobile version