பேரறிவாளன் விடுதலை
அரசியல்இந்தியாசெய்திகள்

30 வருடங்களின் பின் பேரறிவாளன் விடுதலை!

Share

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளனுக்கு விடுதலை கோரும் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, அவரை ரஜீவ் காந்தி கொலை வழங்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது.

சட்டப்பிரிவு 142 ஐப் பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இதேவேளை, ஆளுநர் முடிவு எடுக்காமல் இந்த விடயத்தில் தாமத்தப்படுதியது தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிகிச்சைகளுக்கு இடமளிக்கும் வகையில் 2021 மே மாதம் முதல் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குத் தற்போது விடுதலை கிடைத்துள்ளது.

#indianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...