யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றல் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் உலக நாடுகள் தமது பிள்ளைகளை அரசிடமிருந்து மீட்டுத்தர வேண்டும், உலக நாடுகளால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். தற்போதைய அரசில் நம்பிக்கையில்லை. சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பபப்பட்டன.
இந்த போராட்டத்தின்போது, குறித்த இடத்தில் அரச புலனாய்வாளர்கள் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி வெளியிடுகையில்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், அரச புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது..
பறிகொடுத்த எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரியே நாங்கள் போராட்டங்களை மேற்கொ வருகிறோம். ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி இப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
போடட்டும் நடைபெறும் அவர்கள் எம்மை படமெடுக்கிறார்கள், வீடியோ எடுக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என நாம் கேள்வி எழுப்ப விரும்புகிறோம். – என்றார்.
#SriLankaNews