அகதிகள் கட்டடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

202201271401414905 Cuddalore Two students were killed when an old building SECVPF

தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஸ்தலத்திலேயே இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து நடந்த கட்டிடமானது இலங்கையில் தஞ்சம்கோரிச் சென்ற ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பு எனக் கூறப்படும் அதேவேளை, எவரும் வசிக்காத நிலையில் பழுந்தடைந்த நிலையில் கட்டடங்கள் இருந்தமையால், இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews #India

Exit mobile version