வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பரந்தன் – சிவபுரம் பகுதியில், தற்காலிக கொட்டகைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அவதானித்த அயலவர்கள், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டனர்.
இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.