IMG 6762 750x375 1
செய்திகள்இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்பு !

Share

மட்டக்களப்பு பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுமி ஒருவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் .

குறித்த சிறுமி மட்டக்களப்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08கல்வி பயிலும் 13வயது சிறுமி ஆவார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் நேற்று மாலை வெளியில் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரியும் வீட்டிலிருந்துள்ளனர். சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது தமக்கை குளியலறையிலிருந்ததாகவும், வெளியில் வந்து பார்த்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தூக்கில் தொங்கிய நிலையிலே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...