மன்னார் பஜார் பகுதியில் அங்கர் பால்மா பெட்டிகளைப் பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஒரு தொகை அங்கர் பெட்டிகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள் இதனை மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரசபைக்கு நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த வர்த்தக நிலையத்தை சோதனையிட்டதில் பதுக்கி வைத்த அங்கர் பால்மா பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment