வீதிகளை புனரமைத்துத் தருக! – முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டிய குளம் மற்றும் தென்னியன் குளம் ஆகியவை உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

பழம்பெரும் விவசாய கிராமங்களான தென்னியன் குளம், கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலப்பெருமாள் குளம் உள்ளடங்கலாக சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக குறித்த  கிராம மக்கள் வேறு தேவைகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் செல்லவேண்டியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பிரதான வீதியாக காணப்படுகின்ற வீதிகள் இதுவரை உரிய முறையில் புனரமைக்கப்படாமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தாங்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம் என  கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தங்கள் கிராமங்களுக்கான பிரதான வீதியை புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர.

Exit mobile version