சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப் பாதுகாத்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தனர்.
இக் கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் திருடன் இல்லை என ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியாளரிடம் கூறியதுடன், நேர்காணலை முன்னெடுப்பது என்றால், நாம் வேறு பிரச்சினைகள் பற்றி பேசுவோம் எனவும் கோபமாகத் தெரிவித்துள்ளார்.
திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கூறுங்கள், இரண்டில் ஒன்றை செய்வோம் அல்லது ஊடக சந்திப்பை நிறுத்துவோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளரிடம் கடிந்துகொண்டுள்ளார்.
எனினும் குறித்த கேள்வியை இடைநிறுத்தாது, தொடர்ந்து கேள்விகள் கணைகள் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கிச் சென்றதால், நேர்காணலை நிறுத்துவோம்.
நீங்கள் படித்து விட்டு மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு நாள் வாருங்கள் எனக் கூறி விட்டு அவர் எழுந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SRilankaNews
Leave a comment