யாழில் சம்பிக்க ரணவக்க: வர்த்தகர்களுடனும் கலந்துரையாடல் (படங்கள்)

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

Champika 02

அத்துடன் அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன், 43 படையணியின் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.

ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகிய பின்னர் சம்பிக்க ரணவக்க புத்திஜீவிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அமைப்பே 43 படையணி என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் முன்னெடுத்த அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.

மேலும் நெடுந்தூர புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்குப் பிறகு, பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது குறித்து அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.

#SrilankaNews

Exit mobile version