இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது.
இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டார் செல்லும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதியிலிருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கட்டார் வருவதற்கு முன்னர் பயணிகள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த சோதனை முடிவுகள் கொவிட்-19 தொற்றுக்கு எதிர்மறையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment