கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 21ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும்.
விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் – என்றார்.
Leave a comment