மாகாண சபை நிதிகளை சரியான வழியில் செலவழிப்பதில்லை: ஜீவன் குற்றச்சாட்டு

Jeevan thiyakaraja

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை.

இவ்வாறு வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களின் திருத்த வேலைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். அனைத்து குளங்களும் திருத்தப்பட வேண்டும். குளங்களின் நிலப்பகுதிகள் சில மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம். மற்றும் கால்நடைகளுக்கு உணவு பிரச்சனை இருக்கின்றது. அதனை தீர்ப்பதற்கு என்ன செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலும் மாகாண சபைக்குள் உள்ள நிதிகளை சரியான வழியில் செலவழிப்பதில்லை. மத்திய அரசாங்கம், மாகாணசபை, ஆளுனர் அலுவலகம் என்பன இணைந்து நிதி தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இருக்கும் நிதிகளை சரியான முறையில் செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version