Mahinda 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல்! – மஹிந்த தெரிவிப்பு

Share

கூடிய விரைவில் மாகாண சபைத் நடக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது ”மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடக்குமா?’ – என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,

”ஆம். நடக்கும். கூடிய விரைவில் நடக்கும். எந்த முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென விரைவில் தீர்மானிக்கப்படும்” – என்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கின்றது எனவும் இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், சுற்றுலாப் பயணிகள் வருகை, இலங்கையின் ஏற்றுமதி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...