மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகிவருகின்றது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
அதேபோல சுதந்திரக்கட்சிக்கு அரச கூட்டுக்குள் பாகுபாடு காட்டப்படுவதாகவும், நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறுவதில்லை எனவும் அக்கட்சி உறுப்பினர்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தனிவழி செல்வதற்கு சுதந்திரக்கட்சி தயாராகிவருகின்றது என தெரியவருகின்றது.