தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும்,
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ எச் சந்தர்ப்பத்திலும் நாம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். இதில் நாம் மிகத் தெளிவோடு இருக்கிறோம்.
விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்று கூறினாலே அவர்கள் போராடியது பிழை என்பது இவர்களின் நிலைப்பாடு. அது இயக்க போராட்டமல்ல.
ஒரு சில தமிழ் மக்களை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தனர், அதில் சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அது மக்களின் போராட்டம்.
அத்தோடு கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம் என நாம் எப்பொழுதும் கூறியதில்லை , . தமிழ் மக்களுடைய பலத்தை உடைக்கும் நிலையை நாம் எடுக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment