யாழ் தனியார் வைத்தியசாலை ஒன்று மருந்துக் கழிவுகளை தங்களுக்கு சொந்தமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றில் தீயிட்டு கொழுத்தி எரித்துள்ளனர்.
குறித்த பகுதி சன நெருக்கடி அதிகமான, குடியிருப்புக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்விடத்தை பார்வையிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் சுகாதார துறையினருக்கு தெரிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த சுகாதாரதுறையினர் ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் வைத்தியசாலை தொடர்ந்து மருந்துகழிவுகளை இவ்வாறே குறித்த காணியில் தீயிட்டு கொழுத்தி வந்துள்ளனர்.
பிரதேசவாசிகள் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அறிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment