குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதற்கு மேலும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் தொற்று பரவல் மற்றும் கட்டப்பாடு, நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் போன்றன தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, தொற்றுபரவல் நீங்கி சமூக நிலை திரும்பும்போது இரு தரப்புகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்திருந்தார்.
துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குவைத் அரசால் மேற்கொள்ளக் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடினர்.
Leave a comment