அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப்பசளை பொதியிடல் மத்திய நிலையத்துக்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம், வடமத்திய மாகாணத்தில் 35 நிலையங்களில் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுகின்றன.
பெரும்போகத்துக்காக 50,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி உற்பத்தி செய்யப்பட்ட பசளையின் தரம் பற்றியும் கேட்டறிந்துக்கொண்டார்.
இந்த உற்பத்தி நிலையங்களில் இருந்து கொமர்ஷல் உர நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, அவை கமநலச் சேவைத் திணைக்களத்தின் ஊடாக, விவசாயிகளுக்கு சேதனப் பசளையை விநியோகிக்கின்றது.
ஜனாதிபதியுடன் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட பலர் இவ்விஜயத்தில் இணைந்துக்கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment