யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி – மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டொன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது.
தனியாருக்கு சொந்தமான குறித்த காணியை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும்போது அக்காணியில் குறித்த வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காணியின் உரிமையாளர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த மோட்டார் குண்டானது நீதிமன்ற அனுமதியின் பின்னர் மீட்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment