நாளை முதல் மின் துண்டிப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு

PowerCut

நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் (05) முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 09.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வருவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. ஆகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று (03) காலை 11.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version