இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் குற்ற புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.
குறித்த ஆண் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என்றும் பெண் காலியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் தெரியவருகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இளம் பெண் அழகுக்கலை நிபுணர் எனவும் இவர்கள் ஏற்கனவே இவ்வாறான ஆபாச காணொலிகளை தயார்செய்து பதிவேற்றியுள்ளமை விசாரணையில் தெரியவருகிறது.
இலங்கை சட்டத்தின்படி ஆபாச காணொலிகள் தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment