கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதையல் அகழும் நோக்கோடு குறித்த 7 பேரும் இரண்டு வாகனங்களில் சென்ற பொது கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து சோதனைக்கிடப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து புதைய தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்றும்
அவர்கள் இராமநாதபுரம் – சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக குறித்த பகுதியில், புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பலர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment