நேற்று முன்தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேருக்கும் தனது இரங்கலை இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
குறித்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு நல்கிய நண்பர் என்ற வகையில் ஜெனரல் பிபின் ராவத்தின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment