இந்தியாவிலிருந்து புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்மிட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இத் திட்டத்தின் மூலம் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
ஏற்கனவே 50 ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஏனைய பெட்டிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானம் புகையிரதங்களில் பயணிகளின் நெரிசலை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் புகையிரதப் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Leave a comment