சஜித்துக்கு உடல் பரிசோதனை – கோருகிறது அரசு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மூளை மட்டுமல்ல அவரின் முழு உடலையும் பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தால் செய்ய முடியாவிட்டால், அதை விடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முட்டாள் போல் நடந்து கொள்ளும்போது, அதைப் பார்க்கும் மக்கள் அப்படி நடந்துகொள்வதில்லை . எதிர்க் கட்சியினர் மூளை அற்றவர்கள் போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் உள்ளாடைகள் மட்டுமின்றி ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன. அதைப்பற்றி கதைக்காமல் உள்ளாடை இறக்குமதி தடை தொடர்பில் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.
அரசு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் கவனத்தில் கொண்டு செயற்படுகிறது.
மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாங்கள் சட்டத்தை வளைக்கவில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே சட்டம் தான் – என்றார்.
Leave a comment