1616724880142250 scaled
செய்திகள்உலகம்

ஐரோப்பாவில் 3ஆவது டோஸாக பைஸர்!

Share

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பல்வேறு நாடுகளில் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை 3 வது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றிய மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்த நிலையில் இருந்ததால் பூஸ்டர் டோஸாக 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின், 3-வது டோஸை செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...