கொழும்பில் வீடொன்றிற்குள் நுழைந்து, கொள்ளையடிக்க முயன்ற போது, பிரதேச மக்களிடம் சிக்கி, அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லேரியா, மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
கொள்ளையடிப்பதற்கு மூவர் அடங்கிய குப்பல் ஒன்று முயற்சித்தவேளை, வீட்டில் உள்ளவர்கள் கத்தி கூச்சலிட்டமையினால் அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து மூவரில் இருவர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் அயலவர்களிடம் சிக்கியுள்ளார்.
அப்பிரதேச மக்கள் குறித்த கொள்ளையரைத் தாக்கியதில், படுகாயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews