வரவு செலவுத் திட்டத்தின் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போயுள்ளதாக கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கும், நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்படாமைக்கு எதிர்க்கட்சி வருத்தம் அளிக்கிறது.
அரசாங்க வருமானம் 500 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே அந்த வருமானம் குறைவதற்கு முக்கிய காரணம்.
வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினால் நாட்டுக்கு 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை போக்க நீண்ட கால திட்டமொன்றை மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறானதொரு விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews