நாட்டை மீட்க வேண்டுமெனில் மக்கள் தியாகம் செய்ய வேண்டும்! – கூறுகிறார் கம்மன்பில

Udaya Gammanpila

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தினமும் நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டுமெனில் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் பொருளாதார பிரச்சினை இல்லை எனவும், போதுமான டொலர் கையிருப்பில் உள்ளது எனவும் மக்களிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தால் அவர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர மாட்டார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில், நாட்டு மக்கள் அனைவரும் தியாகங்களை செய்ய வேண்டும் – என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version