கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விறகுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளது என நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சடுதியாக இறப்பர், கறுவாய், முருகை மரங்களின் விறகுகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கட்டு விறகின் விலையானது 30 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் மண்எண்ணெய்க்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக விறகுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போதைய சூழ்நிலையால் விறகுகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதும் அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
#SrilankaNews