யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைதாகிய மூவரும் நேற்று (30) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் கைதாகியவருக்கு 50,000 ரூபா தண்டப்பணமும் ,சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
Leave a comment