பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும்.
இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிதண்ணீர் வசதியைப் பெற்றுள்ள கிளிநொச்சி மக்களுக்கே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் வரிசையில் காத்திருக்காது https://ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments எனும் எமது இணையத்தளத்துக்கு சென்று தன்னியக்க பணபரிமாற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாக இலகுவாகக் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளமுடியும்.
மக்கள் தங்களது ஸ்மார்ட் தொலைபேசியில் NWSDB Self Care அல்லது NWSDB Smart pay ஆகிய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக நீர் பாவனை மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்வதோடு, இலகுவாக கட்டணங்களையும் செலுத்திக்கொள்ள முடியும்.
பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட காரியாலயத்திலும் இம்மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் மாத்திரம் நீர்ப்பட்டியல் கட்டணத்தை நேரடியாகவும் செலுத்த முடியும் – எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment