WhatsApp Image 2021 11 23 at 16.24.33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

18 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வலி.மேற்கு பிரதேச சபை பாதீடு!

Share

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று காலை வலி.மேற்கு – சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டமானது தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

சபையில் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் இடபெற்று, 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

25 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3  உறுப்பினர்களும் மற்றும்  சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

WhatsApp Image 2021 11 23 at 16.24.32

இவ்வரவு செலவு திட்டத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் வாக்களித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4  உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு  உறுப்பினரும் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...