ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.
தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவது தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகள் இக்கூட்டத்தின்போது எடுக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
பங்காளிக்கட்சிகள் இவ்வாறு தொடர் சந்திப்புகளை நடத்துவதால் அரசாங்க கூட்டணியின் பிரதான பங்காளியான மொட்டு கட்சி கடும் அதிருப்தியில் இருக்கின்றது.
Leave a comment