nuraicholai power plant
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்கு எதிராக பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி!

Share

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன.

இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் பகிரங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு மொட்டு அரசுக்கு ஆதரவு வழங்கும் 10 பங்காளிக்கட்சிகள் தயாராகி வருகின்றன.

யுகதனவி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் வழங்குமாறு ஜனாதிபதியிடம், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், அதனை ஜனாதிபதி நிராகரித்தார். பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் மத்திக்கு செல்வதற்கு பங்காளிகள் வியூகம் வகுத்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...