நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசேட அரசிதழொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஜனவரி 18 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும்.
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் வழமையான இரு வாரங்களாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறாது.
இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான அமர்வை ஜனவரி 11 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 18 ஆம் திகதி சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வு. ஜனாதிபதி வருகை தந்து கொள்கை விளக்க உரையை ஆற்றுவார்.
#SriLankaNews
Leave a comment